fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக தேசிய செயற்பாட்டுக்குழு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 27, 2020 09:43

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக தேசிய செயற்பாட்டுக்குழு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய, இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக தேசிய செயற்பாட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். இந்த செயற்பாட்டுக் குழு இன்று மாலை 5.00 மணிக்கு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் கூடவுள்ளது.

இந்த தேசிய செயற்பாட்டுக்குழு ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, சுகாதார அமைச்சின் செயலாளர் ஹந்துனி ஜயரத்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்ஹ, மேலதிக செயலாளர்களான சுனில் டி அல்விஸ், லக்ஷ்மி சோமதுங்க, நிஹால் ஜயதிலக, விசேட வைத்தியர் அனுருத்த பாதெனிய ஆகியோரை உள்ளக்கிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 27, 2020 09:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க