fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

2019ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு தயாரிப்பு பணிகள் பூர்த்தி

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 26, 2020 17:24

2019ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு தயாரிப்பு பணிகள் பூர்த்தி

2019ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு தயாரிப்பு பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. இதனை நாளை அல்லது நாளை மறுதினம் வர்த்தமானியில் பிரசூரிக்க எதிர்ப்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை 22 தேர்தல் மாவட்டங்களிலும், வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் பணிகள் இறுதிப்படுத்தப்பட்டன. அதற்கமைய இம்முறை மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 63 இலட்சத்தையும் தாண்டுமென மஹிந்த தேஷப்ரிய குறிப்பிட்டுள்ளார். 2019ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் அடிப்படையிலேயே 2020ம் ஆண்டின் சகல தேர்தல்களும் இடம்பெறும். 2018ம் ஆண்டு வாக்காளர் இடாப்பை விட, 2019ம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் 3 இலட்சம் பேர் மேலதிகமாக வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 26, 2020 17:24

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க