fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 26, 2020 15:44

பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு

கல்வி, கலை, இலக்கியம் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மத்திய அரசு ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதில் 7 பேருக்கு பத்ம விபூ‌ஷன் விருதும், 16 பேருக்கு பத்ம பூ‌ஷண் விருதும், 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் என 141 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் 34 பேர் பெண்கள். 18 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். மறைந்த முன்னாள் மத்திய மந்திரிகள் ஜார்ஜ் பெர்னாண்டஸ், அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்பட 12 பேருக்கு மரணத்துக்கு பிறகு விருதுகள் கிடைத்து இருக்கின்றன. திரைத்துறையில் பாலிவுட் பிரபலங்கள் பலருக்கு விருது கிடைத்துள்ளது. இந்தி நடிகை கங்கனா ரணாவத், இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர் மற்றும் தயாரிப்பாளர் ஏக்தா கபூர், பாடகர்கள் சுரேஷ் வாட்கர், அத்னன் சமி, டி.வி. நடிகர் சரிதா ஜோஷி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 26, 2020 15:44

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க