ஒரு கிராம் 850 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது சிறையிலுள்ள திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற ஊரு ஜுவா என்கின்ற மாம்புனகே மிலான் மாம்புலன என்ற நபரின் உறவினராக கருத்தப்படும் நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.