எனது முன்னைய வாழ்க்கையை நினைக்க கடினமாக இருக்கிறது
Related Articles
மதராசபட்டணம், தாண்டவம், ஐ, தங்கமகன், கெத்து, தெறி போன்ற பல படங்களில் நடித்த எமி ஜாக்சன் கடைசியாக ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்தார். அதன்பிறகு லண்டன் சென்ற அவர் காதலர் ஜார்ஜ் பனயியோடோவுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. அத்துடன் அவர் ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகியும் உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் ;
எமி ஜாக்ஸன் தனது இன்ஸ்டாகிராமில் தனது 4 மாத குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்டு. ‘இன்றுடன் 4 மாதம் ஆகிறது. நீ எனக்கு குழந்தையாக பிறப்பதற்கு முன் எனது வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை நினைக்க கடினமாக இருக்கிறது. என குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் எமி ஜாக்ஸன் சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டாரா என சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.