fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேசிய பாடசாலை அதிபர் வெற்றிடங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்ய நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 24, 2020 13:25

தேசிய பாடசாலை அதிபர் வெற்றிடங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்ய நடவடிக்கை

தேசிய பாடசாலைகளில் நிலவுகின்ற அதிபர் பற்றாக்குறையை முற்றுமுழுதாக பூரணப்படுத்த போவதாக அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். நாடு பூராகவும் 278 தேசிய பாடசாலைகளில் அதிபர் பற்றாக்குறை கடந்த 9 வருடங்களாக நிலவுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதிபர் வெற்றிடங்களில் 50 சதவீதம் இத்தவணைக்குள் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள வெற்றிடங்கள் அனைத்தையும் இரண்டாம் பாடசாலை தவணைக்குள் பூரனப்படுத்தப்படுமென அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் பதவிக்கு இலங்கை கல்வி நிருவாக சேவையில் முதலாம் தரத்திலுள்ள அதிகாரிகயே நியமிக்கப்படுவர்.

அவ்வாறு இன்றில் அச்சேவையின் 2 ஆம் அல்லது 3 ஆம் தரத்திலுள்ள அதிகாரிகளோ அல்லது இலங்கை அதிபர் சேவையில் முதலாம் தரத்திலுள்ள அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.தேசிய பாடசாலைகளுக்கு அதிபர் பதவிக்காக நேர்முக பரீட்சை அண்மையில் இடம்பெற்றது. அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கென அரச சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவை குழுவிடம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 24, 2020 13:25

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo