யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி
Related Articles
யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியும், சந்தையும் இன்று ஆரம்பமாகின்றன. யாழ் முற்றவெளியில் இந்த கண்காட்சியும், சந்தையும் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு இடம்பெறவுள்ளன. யாழ் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சி 11 ஆவது முறையாக யாழில் நடைபெறுகின்றது.
இந்த வர்த்தக கண்காட்சியில் சர்வதேச தரத்திலான உற்பத்திப் பொருட்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன, மக்கள் இவற்றை பார்வையிடவும், வாங்கவும் முடியும். கண்காட்சியில் 20 நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்களும், முதலீட்டாளர்களும் பங்கேற்கிறார்கள். இது வடக்கில் இடம்பெறும் மிகப்பெரிய வருடாந்த கண்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.