குவைத்திற்கு வீட்டு பணிப்பெண்களாக தொழிலுக்கு சென்ற 52 பெண்கள் இன்றைய தினம் நாடு திரும்பியுள்ளனர். சம்பளம் கிடைக்காமை உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்த நிலையில் அவர்கள் இலங்கை வந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த 52 பேரும் தூதரக அலுவலக பாதுகாப்பில் ஒருவருடம் மற்றும் சில மாதங்கள் இருந்துள்ளனர். வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய அவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு தங்களது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.