fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை – சிம்பாபே அணிகளுக்கு இடையிலான 1வது டெஸ்ட் போட்டியின் 5 ம் நாள் ஆட்டம் இன்று

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 23, 2020 11:32

இலங்கை – சிம்பாபே அணிகளுக்கு இடையிலான 1வது டெஸ்ட்  போட்டியின் 5 ம் நாள் ஆட்டம் இன்று

இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 5 ம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. ஹராரேயில் இடம்பெற்று வரும் போட்டியில் தமது இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் சிம்பாபே அணி நேற்றைய ஆட்டநேர முடிவின்போது விக்கட் இழப்பின்றி 30 ஓட்டங்களை பெற்றிருந்தது. ஏற்கனவே தமது முதலாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய சிம்பாபே 358 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி தமது முதலாவது இனிங்சில் 9 விக்கெட்டுக்களை இழந்து 515 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது. அஞ்சலோ மெத்யுஸ் இரட்டைச் சதத்தை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார். இலங்கை அணி வீரர் ஒருவர் டெஸ்ட் போட்டிகளில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இரட்டைச்சதம் பெற்றுள்ளார்.

அதற்கமைய இலங்கை அணியை விட சிம்பாபே அணி, 10 விக்கெட்டுக்கள் கையிருப்பிலுள்ள நிலையில் 127 ஓட்டங்களால் பின்னிலையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 23, 2020 11:32

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க