வைத்தியர்களிடமுள்ள தனியார் வைத்திய நிலையங்கள் தொடர்பில் ஆய்வு : அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி
Related Articles
வைத்தியர்களிடமுள்ள தனியார் வைத்திய நிலையங்கள் தொடர்பில் ஆய்வொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் அது தொடர்பான நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. தனியார் வைத்திய நிலையங்களின் எண்ணிக்கை தொடர்பான இறுதி ஆய்வு கடந்த 2017ம் ஆண்டு நடத்தப்பட்டது. அதன்போது 657 தனியார் வைத்திய நிலையங்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் தரமற்ற நிலையில் முன்னெடுத்துச்செல்லப்படும் தனியார் வைத்திய மத்திய நிலையங்களினால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதையடுத்து, அது தொடர்பான ஆய்வுகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.