அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான நபர் இனங்காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவிலிருந்து கடந்த 15ஆம் திகதி அமெரிக்காவிற்கு சென்ற ஒருவரே, கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவின் வுஹான் நகரில் பரவிய குறித்த வைரஸினால் கிட்டத்தட்ட 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 06 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை வைரஸ் தொற்று காரணமாக, வட கொரியா தமது எல்லைப்பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான அனுமதியைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.