fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேசிய வருமான சட்டமூல திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 22, 2020 13:07

தேசிய வருமான சட்டமூல திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

தேசிய வருமான சட்டமூல திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பான யோசனையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவையில் சமர்ப்பித்தார். பொருளாதார புத்தாக்கத்தின் கீழ் புதிய அரசாங்கம் வழங்கியுள்ள வரி நிவாரணங்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இலகுவான, முறையான, செயற்திறன் மிக்க வரி செயன்முறைகளை நடைமுறைப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். புதிய வரி மறுசீரமைப்பின் கீழ் நிறுத்தி வைக்கும் வரி இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரை விடுவிக்கப்படும். வருமானத்திற்கான கட்டண வரி ஒரு இலட்சம் ரூபா முதல் இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கப்படும்.

அத்துடன் மேலும் பல வரி நிவாரணங்கள் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதில் அதிகளவான மறுசீரமைப்புக்கள் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாவதாகவும், ஏனைய வரி நிவாரணங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படுமென நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 22, 2020 13:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க