fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஐக்கிய தேசியக்கட்சியின் சகல உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளையும் கொழும்புக்கு அழைக்க தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 22, 2020 13:05

ஐக்கிய தேசியக்கட்சியின் சகல உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளையும் கொழும்புக்கு அழைக்க தீர்மானம்

ஐக்கிய தேசியக்கட்சியின் சகல உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளையும் கொழும்புக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்கென அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கலந்துரையாடல் இடம்பெறுமென பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் மாகாண சபை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆசன அமைப்பாளர்கள் கொழும்பிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அடுத்த வாரம் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் அழைக்கப்பட்டு அவர்களுடன் கலந்துரையாடப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 22, 2020 13:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க