fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 22, 2020 10:00

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயம்

வவுனியா, முதலாம் குறுக்கு தெரு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். முச்சக்கர வண்டியொன்றும் சிறிய லொரியொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. வவுனியாவிலிருந்து ரம்பைக்குளம் நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி, எதிரேவந்த லொரியுடன் மோதியுள்ளது. விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் அதில் பயணித்த மற்றுமொரு பெண் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டியில் பயணித்த மற்றுமொரு குழந்தை எவ்வித பாதிப்புக்களுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 22, 2020 10:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க