fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சர்வதேச ரீதியில் கடந்த ஆண்டு 56 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ தகவல்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 21, 2020 16:53

சர்வதேச ரீதியில் கடந்த ஆண்டு 56 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ தகவல்

சர்வதேச ரீதியில் கடந்த 2019ஆம் ஆண்டு 56 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறித்த எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக யுனெஸ்கோ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகின் அனைத்து பிராந்தியங்களிலும் ஊடகவியலாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு 61 சதவீதம் ஆயுத மோதலை அனுபவிக்காத நாடுகளில் நிகழ்ந்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையியான காலப்பகுதியில் 894 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக யுனெஸ்கோவின் ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 21, 2020 16:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க