fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பஸ் உட்பட கனரக வாகனங்களை செலுத்துவது தொடர்பில் புதிய ஒழுங்குப்படுத்தல்கள்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 21, 2020 12:47

பஸ் உட்பட கனரக வாகனங்களை செலுத்துவது தொடர்பில் புதிய ஒழுங்குப்படுத்தல்கள்

பஸ் உட்பட கனரக வாகனங்களை செலுத்துவது தொடர்பில் புதிய ஒழுங்குப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பஸ் உட்பட அனைத்து கனரக வாகனங்களும் வீதியின் இடது பக்க ஒழுங்கையில் மாத்திரமே பயணிக்க வேண்டுமென நகர வாகன மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் குறித்த முறை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கொழும்பு வாகன போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய சட்டத்தை மீறி செயற்பட்ட 500 சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரில் ஏற்படும் வாகன நெரிசலுக்கு கனரக வாகன சாரதிகள் வீதியின் இடப்பக்க ஒழுங்கையை பயன்படுத்தாமையே காரணமாகும். எதிர்காலத்திலும் குறித்த விடயம் தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தப்படுமென கொழும்பு வாகன போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை நகரை அலங்கரிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நகர வாகன மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் கமல் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 21, 2020 12:47

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க