fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்திய விமான நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 21, 2020 12:35

இந்திய விமான நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு

இந்தியாவின் மங்களுர் விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலைய வளாகத்திலிருந்து, வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 5 அடுக்கு பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமான நிலையத்திலிருந்த பை ஒன்றிலிருந்து வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளது. அதனை துரிதமாக அங்கிருந்து அகற்றிய வெடிகுண்டு நிபுணர்கள், செயலிழக்கச்செய்துள்ளனர்.

எனினும் விமான நிலையத்திற்குள் வெடிகுண்டு கொண்டுவரப்பட்டமை தொடர்பில் சீசீடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டின் ஏனைய மாநிலங்களில் முக்கிய இடங்கள் மற்றும் விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 21, 2020 12:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo