fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மத்தல விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 21, 2020 12:35

மத்தல விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

மத்தல விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துறைசார் அமைச்சரின் ஆலோசனைக்கமைய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவன உப தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

மத்தல விமான நிலையத்தை மீள செயற்படுத்துவதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருகிறது. விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் என்ற வகையில் வழங்கவேண்டிய ஒத்துழைப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 12ம் திகதி அது தொடர்பான பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாகவும் விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவன உப தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 21, 2020 12:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo