பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. சபாநாயகர் கரூ ஜயசூரியவின் பங்கேற்பில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் அரசியல் கட்சிகளினால் தெரிவுசெய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கான அனுமதி இன்று பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. ஆளும் கட்சியின் 9 உறுப்பினர்களும், எதிர்க்கட்சியின் 9 உறுப்பினர்களின் பெயர் பட்டியல் பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 17 பேரை உள்ளடக்கிய தெரிவுக்குழுவுக்கான அனுமதி இன்று பெற்றுக்கொள்ளப்படும்.
ச்சமல் ராஜபக்ஷ, நிமல் சிறிபால டி சில்வா, தினேஸ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, டக்ளஸ் தேவானந்தா, மஹிந்த சமரசிங்க, மஹிந்த யாப்பா அபேவர்தன, ரோஹித்த அபேகுணவர்தன உள்ளிட்ட அமைச்சர்கள் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
இதேவேளை விஜித ஹேரத், பாட்டலி ச்சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், நிரோஷன் பெரேரா, மாவை சேனாதிராஜா, லக்ஸ்மன் கிரியல்ல, ஜோன் அமரதுங்க, விஜத ஹேரத், ரிஷாட் பதியூதீன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவுக்குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.