fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 20, 2020 13:03

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை

நாட்டில் நிலவும் வரட்சியான வானிலை காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி சபை பொதுமக்களை கோரியுள்ளது. வரட்சியான வானிலையுடன் மின்சாரத்தின் கேள்வியும் அதிகரித்துள்ளதாக மின்சக்தி சபையின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நாளாந்த மின் உற்பத்தியில் நூற்றுக்கு 70 வீதமான மின்சாரம் அனல் மின் நிலையங்களின் ஊடாக உற்பத்தி செய்யப்படுகிறது. எஞ்சிய 30 வீத மின் உற்பத்திக்கு மாத்திரமே , நிர் மின் நிலையங்கள் பயன்படுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நூற்றுக்கு ஒரு வீதமான மின் உற்பத்திக்கு, சூரிய மின் நிலையங்கள் பயன்படுவதாகவும் மின்சக்தி சபையின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வரட்சி நிலவுவதால் குடிநீர் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீரை பெறுவதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இதனால் மின் உற்பத்திக்கு, நீர் மின் நிலையங்களின் பங்களிப்பு குறைவாகவே பெறப்படுவதாக மின்சக்தி சபையின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 20, 2020 13:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க