fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை இரட்டையர்கள் சங்கம் புதிய உலக சாதனை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 20, 2020 12:40

இலங்கை இரட்டையர்கள் சங்கம் புதிய உலக சாதனை

இலங்கை இரட்டையர்கள் சங்கம் புதிய உலக சாதனையொன்றை படைக்கும் முயற்சியை இன்று முன்னெடுத்துள்ளது. உலகின் அதிகளவான இரட்டையர்களின் ஒன்றுகூடலை நடத்தி சாதனை படைக்கும் முயற்சி இடம்பெற்று வருகிறது. இதற்கமைய கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இதற்கான நிகழ்வு இன்று காலை முதல் இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதில் பங்கேற்க விரும்பும் இரட்டையர்கள் தமது பிரதேச செயலாளரினால் உறுதிப்படுத்தப்பட்ட பிறப்புச்சான்றிதழின் பிரதி மற்றும் தேசிய அடையாள அட்டையின் பிரதியுடன் வருகை தருமாறு இலங்கை இரட்டையர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை 18 வயதிற்கு குறைந்த இரட்டைகள் உறுதிப்படுத்தப்பட்ட பிறப்புச்சான்றிதழின் பிரதியுடன் தமது தாய் அல்லது தந்தையின் தேசிய அடையாள அட்டையின் பிரதியை எடுத்து வர வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 20, 2020 12:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க