fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கீர்த்தி சுரேஷின் அடுத்த படம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 20, 2020 10:11

கீர்த்தி சுரேஷின் அடுத்த படம்

கடந்த 2019ஆம் ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடித்த ஒரு படம்கூட வெளியாகவில்லை என்பது அவரின் ரசிகர்களுக்கு கவலை அளித்தமை குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த ஆண்டு அவருக்கு ரஜினியுடன் நடித்து வரும் ’தலைவர் 168’ உள்பட ஓரிரு படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நடித்த அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மோகன்லாலுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த மலையாள படம் ஒன்றின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் இந்த படத்தில் ஆர்ச்சா என்ற கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் ’Marakkar Arabikadalinte Simham’ என்ற டைட்டில் கொண்ட இந்த படம் வரும் மார்ச் 26ஆம் தேதி தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 20, 2020 10:11

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க