fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யும் வகையில் பட்டதாரிகளுக்கு நியமனம் : ஜனாதிபதி

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 19, 2020 19:05

தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யும் வகையில் பட்டதாரிகளுக்கு நியமனம் : ஜனாதிபதி

தேசிய பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிப்பு செய்யும் வகையில் தொழில் வாய்ப்புக்கென காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு விரைவில் அரசாங்கத்தில் தொழில் வாய்ப்பு வழங்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றுள்ள துறைகளுக்கு அமைய அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படும்.

பட்டதாரிகளுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு பயிற்சிகளுக்கான சந்தர்ப்பமும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். தலைமைத்துவ பயிற்சி மற்றும் அரச சேவை தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். அரச சேவையாளர்களின் மக்கள் சேவை மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கென ஆற்றவேண்டிய பணிகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்படும். அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படும் அனைவருக்கும் பயிற்சிகள் வழங்கப்படுவது கட்டாயமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்து செல்வதில் இளைஞர் யுவதிகளுக்கு அதிகபங்களிப்பு காணப்படுகிறது. அவர்களுக்கு உரியமுறையில் தெளிவூட்டல்களை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பெனவும் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்தார். மக்களுக்கு சேவையாற்றக்கூடிய வகையில் அரச சேவை மற்றும் அரச சேவையாளர்களை உருவாக்குவதே தமது நோக்கமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அரசாங்கம் , அரை அரசாங்கம் மற்றும் திணைக்களங்களில் காணப்படும் பதவிவெற்றிடங்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. நாட்டின் முன்னோக்கிய பயணத்தில் காணப்படும் மிகப்பெரிய சக்தி மனிதவளமாகும். புத்திசாதூர்யமான இளம் பராயத்தினரை முகாமைத்துவப்படுத்தி அவர்களை பொருளாதார வளர்ச்சியின் பங்காளார்களாக மாற்றுவது அவசியமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கல்விக்கென பாரிய முதலீடுகளை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியிலுள்ள வேலைதேடும் பட்டதாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்தவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த விடயங்களை தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 19, 2020 19:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo