இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இன்றைய முதல் போட்டி ஹராரேயில் இலங்கை நேரப்படி பிற்பகல் 01.30க்கு ஆரம்பமாகும். இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்னவும், சிம்பாபே அணிக்கு சீன் வில்லியம்ஸும் தலைமைதாங்கவுள்ளனர். இதேவேளை இரு அணிகளுக்குமிடையில் முதற்தடவையாக கடந்த 1994ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியொன்று இடம்பெற்றது. இதனையடுத்து சிம்பாபேயுடன் விளையாடிய 7 போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிப்பெற்றது. 2018ம் ஆண்டின் பின்னர் சிம்பாபே அணிக்கு சர்வதேச கிரிக்கெட் தடை விதிக்கப்பட்டது. தடைக்கு பின்னர் குறித்த அணி முகங்கொடுக்கும் முதலாவது டெஸ்ட் போட்டியாக இது அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை – சிம்பாபே அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டி இன்று
படிக்க 1 நிமிடங்கள்