fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீனாவில் இனங்காணப்பட்டுள்ள புதிய வகை வைரஸினால் பலர் பாதிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 19, 2020 13:32

சீனாவில் இனங்காணப்பட்டுள்ள புதிய வகை வைரஸினால் பலர் பாதிப்பு

சீனாவில் இனங்காணப்பட்டுள்ள புதிய வகை வைரஸினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர்ப்பார்த்ததைவிடவும் வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 60 பேர் கொரோனோ வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும் ஆயிரத்து 700க்கும் அதிகமானோர் இதனால் பாதிக்கப்பட்டிருக்கலாமென மதிப்பிடப்பட்டுள்ளது. கொரோனோ வைரஸினால் இருவர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தாக்கம் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சீன சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வைரஸ் உருவாகியமைக்கான அடிப்படை காரணத்தை கண்டறியும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை சீனாவில் இனங்காணப்பட்ட குறித்த வைரஸ் ஏனைய நாடுகளிலும் பரவியுள்ளதா என்பது குறித்து ஆராயும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 19, 2020 13:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க