fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிரியாவில் அரச படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் போர் உக்கிரம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 17, 2020 12:04

சிரியாவில் அரச படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் போர் உக்கிரம்

சிரியாவில் அரச படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் உக்கிர போர் நடைபெற்றுள்ளது. இதனால் 39 பேர் பலியாகியுள்ளனர். அதில் 17 இராணுவத்தினரும் அடங்குவதாக சிரியா மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இட்லிப் நகரில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் ஆயுததாரிகள் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் விமான தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 18 பேர் பலியானதாக மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. ரஷ்யா மற்றும் சிரியா கூட்டுப்படையினர் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதேவேளை கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் திகதி முதல் சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெறுகிறது. ஜனாதிபதி பசர் அல் அஷாட்டை பதவி விலகுமாறு கோரி, கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 17, 2020 12:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க