fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச்செல்வதற்காக அனைவரும் பங்களிப்புச் செய்ய வேண்டும்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 16, 2020 14:10

ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச்செல்வதற்காக அனைவரும் பங்களிப்புச் செய்ய வேண்டும்

பலமான பாராளுமன்றத்தை ஏற்படுத்தி ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச்செல்வதற்காக அனைவரும் பங்களிப்புச் செய்ய வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியொருவருக்கு எவ்வாறான அதிகாரிகள் காணப்பட்ட போதிலும் பாராளுமன்றத்தின் அதிகாரம் கிடைக்காதபட்சத்தில் வெற்றிகரமான பயணம் ஒன்றை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்றும் பொலன்னறுவையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது அவர் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொலன்னறுவை பிரதான செயற்பாட்டு அலுவலகம் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. பொலன்னறுவை 28வது மைல் கல் பகுதியில் இச்செயற்பாட்டு அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலசுக உறுப்பினர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 16, 2020 14:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo