fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொலிஸ் அதிகாரிகளை ஏளனம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான மற்றுமொரு விசாரணை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 16, 2020 10:11

பொலிஸ் அதிகாரிகளை ஏளனம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான மற்றுமொரு விசாரணை

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான மற்றுமொரு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அவர் கைதுசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் பொலிஸ் அதிகாரிகளை ஏளனம் செய்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கென குற்றத்தடுப்பு பிரிவு சட்டமா அதிபரின் ஆலோசனையையும் கோரியுள்ளது. மாதிவெலையிலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து அவரை கைதுசெய்ய பொலிஸ் அதிகாரிகள் சென்ற சந்தர்ப்பத்தில் தனது முகப்புத்தகத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றிருந்தார். அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 16, 2020 10:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க