fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொழும்பு – கண்டி வீதியின் ஈரியவெட்டிய பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 16, 2020 11:23

கொழும்பு – கண்டி வீதியின் ஈரியவெட்டிய பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கிரிபத்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – கண்டி வீதியின், ஈரியவெட்டிய பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டியொன்றில் பயணியொருவர் ஏற முற்பட்ட வேளையில், பஸ் தரிப்பிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மற்றுமொரு பஸ் வண்டியில் சிக்கி பலத்த காயமடைந்துள்ளார். அவர் கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

ரந்தாவடுன்ன பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான நபரே சம்பவத்தில் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. விபத்துடன் தொடர்புடைய பஸ் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொட பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 16, 2020 11:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க