fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடந்த ஆண்டின் ICC சிறந்த வீரர்களுக்கான விருது பட்டியல் அறிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 16, 2020 11:45

கடந்த ஆண்டின் ICC சிறந்த வீரர்களுக்கான விருது பட்டியல் அறிவிப்பு

2019ம் ஆண்டின் சிறந்த வீரர்களுக்கு வழங்கப்படவுள்ள விருது பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. அதற்கமைய ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது இங்கிலாந்து அணியின் சகலத்துறை வீரர் பென் ஸ்டொக்ஸுக்கு வழங்கப்படவுள்ளது.

அதேபோல் சிறந்த டெஸ் வீரருக்கான விருது அவுஸ்திரேலிய அணியின் பெட் கம்மின்ஸுக்கும், சிறந்த ஒருநாள் வீரருக்கான விருது இந்திய அணியின் ரோஹித் சர்மாவுக்கும் வழங்கப்படவுள்ளது.

கடந்த ஆண்டின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் சிறந்த தலைவராக இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். விராட் கோஹ்லிக்கு மற்றுமொரு விருதும் வழங்கப்படவுள்ளது. ஸ்ப்ரிட் ஒப் கிரிக்கெட் 2019 என்ற விருதும் விராட் கோஹ்லிக்கு வழங்கப்படவுள்ளது.

உலக கிண்ண தொடரின்போது அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித்தை ரசிகர்கள் கேலி செய்தபோது, அவர்களை தடுத்து ஸ்டீவன் ஸ்மித்தை உற்சாகப்படுத்துமாறு விராட் கோஹ்லி சைகை செய்ததற்காக இவ்விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த ஆண்டின் சிறந்த டுவண்டி – 20 வீரராக இந்திய சுழல்பந்துவீச்சாளர் தீபக் ச்சஹர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பங்களாதேஷுக்கு எதிராக 7 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுக்களை வீழ்த்திய நிலையில், அவர் இவ்விருதுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை கடந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் போட்டிக்கான அணியில் விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா, மொஹமட் சமி, குல்திப் யாதவ் ஆகிய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். டெஸ்ட் அணியில் விராட் கோஹ்லி மற்றும் மயங் அகர்வால் ஆகிய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

இதனிடையே கடந்த ஆண்டின் சிறந்த நடுவருக்கான விருது இங்கிலாந்து நடுவர் ரிச்சர் இல்லிங்வேர்த் தெரிவாகியுள்ளார். மேலும் 2019ம் ஆண்டின் வளர்ந்து வரும் வீரருக்கான விருது அவுஸ்திரேலிய அணியின் மானஸ் லபுச்சேனுக்கு வழங்கப்படவள்ளது. ஐ.சீ.சீ இணை அணிகளின் சிறந்த வீரராக ஸ்கொட்லாந்தின் கயில் கோட்ஸர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 16, 2020 11:45

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க