தர்பார் படத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை
Related Articles
தர்பார் படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்தை வீணடித்து இருப்பதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொந்தளிக்கிறார்கள். ரஜினி மகளாக வரும் நிவேதா தாமசுக்கு அளித்திருந்த முக்கியத்தும் கூட நயன்தாராவுக்கு இல்லை என்றும் ஆத்திரப்படுகிறார்கள். சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடித்து திறமையை வெளிப்படுத்தி வரும் நயன்தாரா எதற்காக இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.
நயன்தாராவும் படத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று ஏ.ஆர்.முருகதாஸ் மீது கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே முருகதாஸ் இயக்கிய கஜினி படத்திலும் தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்தது. எனது சினிமா வாழ்க்கையில் எடுத்த மோசமான முடிவு அந்த படத்தில் நடித்ததுதான் என்றும் கூறியிருந்தார்.