சாதாரண தர பரீட்சையின் 2ம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம்
Related Articles
கல்விப்பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளன. எதிர்வரும் 26ம் திகதி வரை மதிப்பீட்டு பணிகள் இடம்பெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
27 பாடசாலைகளில் மதிப்பீட்டு பணிகள் இடம்பெறவுள்ளன. அதில் மூன்று பாடசாலைகள் முழுமையாக மூடப்படவுள்ளதோடு, ஏனைய 24 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்படவுள்ளன. மதிப்பீட்டு பணிகளில் 9 ஆயிரம் அதிகாரிகள் ஈடுபடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.