fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாகிஸ்தான் கிரிக்கட் சுற்றுப்பயணத்தை உறுதி செய்ததது பங்களதேஷ்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 15, 2020 14:15

பாகிஸ்தான்  கிரிக்கட் சுற்றுப்பயணத்தை உறுதி செய்ததது பங்களதேஷ்

பங்களதேஷ் கிரிக்கட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் பங்களதேஷ் அணிகளுக்கு இடையில் இரண்டு டெஸ்ட், ஒரு ஒருநாள் மற்றும் மூன்று 20 – 20 போட்டிகளை கொண்ட தொடர் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத்தொடரை பாகிஸ்தானில் நடத்த வேண்டுமென பாகிஸ்தான் கிரிக்கட் சபை திட்டவட்டமாக அறிவித்தது. எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக பங்களதேஷ் கிரிக்கட் சபை தயக்கம் காட்டிவந்தது. இந்நிலையில் இருநாட்டு கிரிக்கட் சபைகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் பங்களதேஷ் அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இணக்கம் காணப்பட்டது.

அதற்கமைய 3 போட்டிகளை கொண்ட 20 – 20 தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 24 ம் திகதி லாகூரில் நடைபெறும். இரண்டாவது போட்டி 25 ம் திகதியும் மூன்றாவது போட்டி 27 ம் திகதியும் லாகூரில் நடைபெறவுள்ளன. அதன்பின்னர் முதலாவது டெஸ்ட் போட்டி பெப்பரவரி 7 ம் திகதி ராவல்பிண்டியில் ஆரம்பமாகவுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக ஏப்ரல் மாதம் 5 ம் திகதி ஆரம்பமாகும். ஒருநாள் சர்வதேச போட்டி ஏப்ரல் மாதம் 3 ம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 15, 2020 14:15

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க