fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்த வேண்டாமென தமிழ் ஊடகங்களிடம் பிரதமர் கோரிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 15, 2020 14:10

அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்த வேண்டாமென தமிழ் ஊடகங்களிடம் பிரதமர் கோரிக்கை

அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்த வேண்டாமென சகல தமிழ் ஊடகவியலாளர்களிடமும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கைவிடுத்துள்ளார். தமிழ் மக்களும் அரசாங்கமும் ஒன்றிணைந்து எதிர்கால அரசியல் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தமிழ் ஊடகங்கள் உதவி செய்ய முன்வரவேண்டுமென பிரதமர் வலியுறுத்தியுள்ளார். நேற்றைய தினம் அலரிமாளிகையில் தமிழ் ஊடகங்களின் பிரதானிகளை சந்தித்த போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இலங்கை அரசாங்கத்தின் ஊடாக நல்லதொரு தீர்வை பெற்றுக்கொடுக்க இன்றைய எமது அரசாங்கம் முனைப்புடன் பணியாற்றி வருகிறது. இவ்வாறான விடயங்களுக்கு ஊடகங்கள் முன்னுரிமை வழங்க வேண்டும். அரசாங்கத்தின் தவறுகள் நிச்சயமாக சுட்டிக்காட்டப்பட்டு விமர்ச்சிக்கப்படவேண்டும்.

அதேபோல் நல்லவேலைத்திட்டங்களுக்கு உறுதுணையாக இருந்து தமிழ் மக்களிடம் அந்த செய்தி சென்றடைய தமிழ் ஊடகங்கள் முனைப்புடன் செயற்படவேண்டுமெனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தினார். கடந்த தேர்தலில் வடக்கு கிழக்கில் மிக குறைவான மக்களே எமது ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களித்தனர். எனினும் வடக்கு கிழக்கில் எமது அபிவிருத்தி எவ்விதத்திலும் குறைவடையாது. யார் வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும் முழு நாட்டு மக்களுக்கும் இந்த அரசாங்கத்தின் சேவை குறைவில்லாது தொடருமெனவும் பிரதமர் இங்கு சுட்டிக்காட்டினார். வடக்கு கிழக்கு மக்களை நாம் எந்த சந்தர்ப்பத்திலும் கைவிடமாட்டோம். அதில் எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லையெனவும் பிரதமர் இங்கு வலியுறுத்தினார்.

இதேவேளை தமிழ் மொழியில் தேசிய கீதம் பாட எவ்வித தடையுமில்லையென இதன்போது பிரதமர் தெரிவித்தார். அரசியல் நோக்கத்திற்காக சிலர் பிரச்சினைகளை உருவாக்க அவ்வப்போது இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர். எமது அரசாங்கத்தை பொறுத்தவரையில் தேசிய கீதம் எந்த மொழியிலும் பாடலாம் அதற்கு எவ்வித தடையுமில்லை. இதுவே அரசாங்கத்தின் நிலைப்பாடு என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமிழ் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போது மேலும் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 15, 2020 14:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க