ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் நாளை பேச்சுவார்த்தை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 15, 2020 12:27

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் நாளை பேச்சுவார்த்தை

ஐக்கியதேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படுமென கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார். தலைமைத்துவம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. எவ்வாறெனினும் கட்சியின் மத்திய செயற்குழுவே இறுதி தீர்மானத்தை எடுக்குமென அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச மற்றும் கருஜெயசூரிய ஆகிய மூவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டுமென சிலர் தெரிவிக்கின்றனர். சிலர் சகல பொறுப்புக்களையும் சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைத்து விட்டு ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டுமென கோருகின்றனர். இவை குறித்து கட்சி உறுப்பினர்கள் கலந்துரையாடி எதிர்காலம் குறித்து தீர்மானிப்படுமென அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 15, 2020 12:27

Default