fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்திய – அவுஸ்திரேலிய முதலாவது ஒருநாள் போட்டி இன்று

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 14, 2020 12:55

இந்திய – அவுஸ்திரேலிய முதலாவது ஒருநாள் போட்டி இன்று

சுற்றுலா அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. விராட் கோஹ்லி தலைமையில் இந்திய அணியும், எரோன் பின்ச் தலைமையில் அவுஸ்திரேலிய அணியும் களமிறங்கவுள்ளன.

அவுஸ்திரேலியா சார்பில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்ட மானஸ் லபுச்சேனுக்கு ஒருநாள் போட்டிகளில் இன்று அறிமுகம் வழங்கப்படுகிறது. இதேவேளை இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ப்ரா உலக கிண்ண அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கெதிராக விளையாடிய போட்டியின் பின்னர், இன்றைய தினம் முதன்முறையாக ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளார்.

இன்றைய தினம் ஷிக்கர் தவான், ரோஹித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகிய வீரர்கள் அணிக்கு திரும்புவதால், ரிஷப் பேண்ட்டுக்கு பதிலாக லோகேஷ் ராகுல் இந்திய அணியின் விக்கட் காப்பாளராக செயற்படலாமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 14, 2020 12:55

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க