fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை வருகைத்தந்துள்ள வெளிநாட்டு பிரதிநிதிகள் இன்று முக்கிய சந்திப்புக்களில்..

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 14, 2020 12:37

இலங்கை வருகைத்தந்துள்ள வெளிநாட்டு பிரதிநிதிகள் இன்று முக்கிய சந்திப்புக்களில்..

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லெவ்ரோ இரண்டுநாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகைத்தந்துள்ளார். ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பொருளாதாரம், பாதுகாப்பு, கல்வி, சுற்றுலா, விஞ்ஞானம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். பேச்சுவார்த்தைகள் நிறைவுபெற்றவுடன், ரஷ்ய மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதேவேளை உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் எலிஸ் வேல்ஸ் இன்று காலை நாட்டுக்கு வருகைத்தந்தார். அவர் இன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை சந்திக்கிறார். மேலும் அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் பலரை அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று அதிகாலை நாட்டுக்கு வருகைத்தந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வேங் யீ இன்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் அகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இன்று காலை அவர் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தார். அவர் இன்றிரவு நாட்டிலிருந்து புறப்படவுள்ள நிலையில், முக்கிய சந்திப்புக்களை மேற்கொள்வாரென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 14, 2020 12:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க