கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஐக்கிய தேசிய கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவுகள் பிரச்சினையை அடுத்து அவர் தற்காலிகமாக கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
கட்சிக்கு கிடைத்த பல்வேறு முறைப்பாடுகளை ஆராய்ந்து, கட்சி, கட்சி தலைவருக்கு அறிவித்த நிலையில் அவர் ரஞ்சன் ராமநாயக்கவின் கட்சி உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்தார். இத்தீர்மானத்தை ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழுவில் சமர்ப்பித்து, அனுமதி பெறவும் கட்சியின் தலைவர் தீர்மானித்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.