தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க உதவி செயலாளர் எலிஸ் வெல்ஸ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாட்டுக்கு வருகைதரவுள்ளார். 2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகைதரும் அவர், அரசின் உயர்மட்ட பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை – அமெரிக்க இருதரப்பு உறவை மேலும் சக்திமிக்கதாக்குவது குறித்தும் இப்பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.