இன்புளுவென்சா நோய்த்தொற்று தொடர்பில் தேவையற்ற பீதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாமென சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது புதிய வைரசினால் ஏற்படும் நோய்த்தொற்று அல்ல என சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் தற்போதைய நிலைமையில் சிறுவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. அதிக சனநெரிசல் உள்ள பகுதிகளில் நடமாடுதல், தேவையற்ற பயணங்களை தவிர்த்தல் என்பன உகந்ததென தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல், தடிமன் இருப்பின் உடனடியாக வைத்திய சிகிச்சை பெறுமாறு சுகாதார பிரிவினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.