எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று மலையக மக்களின் சம்பள உயர்வு தொடர்பான நற்செய்தியொன்று அறிவிக்கப்படுமென அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற மகாத்மா காந்தியின் 150 ஆவது நினைவுதினம் மற்றும் இந்திய வம்சாவளி மக்கள் தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அண்மையில் ஜனாதிபதியை உத்தியோகபூர்வமாக சந்தித்து பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைத்தல், மதுபான கடைகளை அகற்றி வேறு இடங்களில் அமைத்து, காடுகளாக உள்ள தோட்டக்காணிகளை தோட்ட இளைஞர்களுக்கு பகிர்ந்தளித்தல், பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு தேவையான கணித, விஞ்ஞான ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக்கொடுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இதேவேளை தைப்பொங்கல் தினத்தன்று மலையக மக்களுக்கு நற்செய்தியொன்றை அறிவிப்பேன் எனவும், இதற்கு ஜனாதிபதி நம்பிக்கை வழங்கியுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.