வரலாற்று சிறப்புமிக்க களனி ரஜமகா விஹாரையின் வருடாந்த துருத்து மகா பெரஹரவின் இறுதி உற்சவம் நேற்றிரவு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்து கொண்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மங்கல பேழையை யானையின் மீது வைத்து பின்னர் பெரஹர ஊர்வலம் ஆரம்பமாகியது. களனி ரஜமகா விஹாரையின் விஹாரதிபதி பேராசிரியர் சங்கைக்குரிய கொல்லுபிடியே மஹிந்த சங்க ரக்கித தேரரின் அனுசாசனம் வழங்கினார். அமைச்சர் சமல் ராஜபக்ஷ, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். யானைகளின் பேரணி உள்ளிட்ட நடன நிகழ்வுகளை கண்டுகளிக்க பெருந்திரளானோர் வருகை தந்திருந்தனர்.