fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

துருத்து முழு நோண்மதி தினம் இன்றாகும்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 10, 2020 14:32

துருத்து முழு நோண்மதி தினம் இன்றாகும்

புத்த பெருமானின் முதலாவது இலங்கை விஜயம் உள்ளிட்ட பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த நிகழ்வுகள் இடம்பெற்ற துருத்து முழு நோண்மதி தினம் இன்றாகும்.

துருத்து முழு நோண்மதி தினத்தை முன்னிட்டு போயா தினங்களில் ஐரீஎன் ஊடாக ஒளிபரப்பாகும் சவனக் ரெஸ் நிகழ்ச்சி இம்முறை கம்புருபிடிய ஹொரப்பாவிட்ட ஸ்ரீ விஜயசுந்தராம விஹாரையில் இடம்பெறுகின்றது. விஹாராதிபதி தொரவ்வே ஞானரத்த தேரரின் தலைமையில் சில் அனுஷ்டானங்களும் தியான நிகழ்வுகளும் பின்கம நிகழ்வுகளும் இன்று காலை முதல் இடம்பெறுகின்றன. இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உள்ளிட்ட பெருந்திரளான பக்தர்கள் காலைவேளையில் பின்கம நிகழ்வுகளில் இணைந்திருந்தனர்.

ஐரீஎன் எப்.எம்;மில் ஒலிபரப்பாகும் சாசனாலோக்க நிகழ்ச்சி இம்முறை கம்புருபிடிய ஹொரப்பாவிட்ட ஸ்ரீ விஜயசுந்தராம விஹாரையில் இடம்பெறுகின்றது. சாமநேர தேரர்களுக்கு தம்ம நூல்களும் வழங்கப்பட்டன. பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 10, 2020 14:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க