fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்லும் பயணிகள் பஸ் வண்டிகளுக்கு எதிராக நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 9, 2020 12:10

பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்லும் பயணிகள் பஸ் வண்டிகளுக்கு எதிராக நடவடிக்கை

பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்லும் பயணிகள் பஸ் வண்டிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வட மாகாணத்தில் சில பஸ் வண்டிகள் பாடசாலை சீருடையில் இருக்கும் மாணவர்களை ஏற்றிச்செல்வதில்லையென முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

குறித்த பஸ் வண்டிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை திட்டமிட்டுள்ளது. இதேவேளை பாடசாலை மாணவர்களுக்கு நிறைவான சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மேலதிக பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 9, 2020 12:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க