அமெரிக்க – ஈரான் போர் பதற்றம் காரணமாக இலங்கை விமான சேவையின் வழித்தடம் மாற்றம்
Related Articles
ஸ்ரீ லங்கன் விமான சேவையின் கொழும்பு முதல் லண்டன் வரை பயணிக்கும் விமானத்தின் மார்க்கம் மாற்றப்பட்டுள்ளது. பேர்ஷியன் வளைகுடா வலயத்தில் தற்போது காணப்படும் நிலமையை கவனத்தில் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான சேவைநிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரான் மற்றும் ஈரான் வான் எல்லையை தவிர்த்து விமான போக்குவரத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச நிலமைகள் தொடர்பில் கூர்ந்து கவனித்து சர்வதேச அதிகாரிகளுடன் தொடர்ச்சியாக தொடர்புகளை பேணி இதுகுறித்தான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அவர்கள் தெரிவித்தனர். விமானப் பயணிகள் மற்றும் சேவையாளர்களின் பாதுகாப்பை உயர்ந்தமட்டத்தில் உறுதிப்படுத்த சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.