இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சாத்திகளுக்கென தேசிய அடையாள அட்டையை விநியோகிக்க விசேட வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இதுவரை தேசிய அடையாள அட்டைக்கு விண்ணாப்பிக்காத சகல மாணவர்களும் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ம் திகதிக்கு முன்னர் மாகாண அல்லது பிரதான காரியாலயத்தில் ஒப்படைக்குமாறு ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
2004 ம் ஆண்டு பெப்பரவரி மாதம் முதலாம் திகதி முதல் 2005 ம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ம் திகதிக்குள் பிறந்த சகல மாணவர்களும் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும். இதுதொடர்பில் பாடசாலை அதிபர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.