ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் சிரியாவுக்கு திடீர் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் பதட்டநிலை காணப்படும் இச்சந்தர்ப்பத்தில் புட்டின் சிரியாவுக்கு சென்றுள்ளார். சிரிய ஜனாதிபதி மற்றும் அதிகாரிகளை சந்தித்து ரஷ்யா ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அமெரிக்க – ஈரான் விவகாரம் குறித்தும் பேசப்பட்டிருக்கலாமென சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. சிரியா, எல்லையிலுள்ள ஈராக்கிலிருந்து அமெரிக்க இராணுவம் உடன்வெளியேற வேண்டுமென ஈராக் வலியுறுத்தி வரும் நிலையில் விளாடிமீர் புட்டினின் சிரிய விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.