fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

7 விக்கெட்டுக்களால் இலங்கையை வீழ்த்தியது இந்தியா

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 8, 2020 06:17

7 விக்கெட்டுக்களால் இலங்கையை வீழ்த்தியது இந்தியா

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது 20 – 20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டி நேற்று இந்தூரில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களை பெற்றது. அதிகூடியதாக குசல்ஜனீத் பெரேரா 34 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். சர்துல் தாகுர் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் 143 ஓட்டங்களை இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 17.3 ஒவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. லோகேஷ் ராகுல் 45 ஓட்டங்களையும் ஸ்ரெயாஸ் ஐய்யர் 34 ஓட்டங்களையும் சிக்கர் தவான் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். அணித்தலைவர் விராட் கோலி ஆட்டமிழக்காது 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். 4 ஓவர்கள் பந்து வீசி 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை வீழ்த்திய இந்திய வீரர் நௌடீப் சைனி ஆட்டநாயகனாக தெரிவானார். இரு அணிகளுக்கும் இடையிலான இறுதி 20 – 20 போட்டி நாளை மறுதினம் பூனேயில் நடைபெறவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 8, 2020 06:17

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க