ஷானி அபேசேகர மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 8, 2020 06:24

ஷானி அபேசேகர மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை

பணிநீக்கம் செய்யப்பட்ட குற்றப்புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இரண்டுவாரங்களுக்குள் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பதில்பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

ஷானி அபேசேகர முன்னெடுத்த தொலைபேசி உரையாடல் ஊடக இலங்கை பொலிஸ் சேவை, அபகீர்த்திக்குள்ளாகியுள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் பிரதியமைச்சராகவிருந்த ரன்ஜன் ராமநாயக்கவுடன் ஷானி அபேசேகர கலந்துரையாடிய விடயங்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தொலைபேசி கலந்துரையாடல் தொடர்பில் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் சில வழக்குகள் தொடர்பில் ரன்ஜன் ராமநாயக்கவும் ஷானி அபேசேகரவும் உரையாடுகின்றனர். குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த கந்தப்பாவும், ரன்ஜன் ராமநாயக்கவுடன் உரையாடுகின்றார். குறித்த ஒலிப்பதிவும் வெளியாகியுள்ளது. இதனால் சம்பவங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் நிஷாந்த வீரசிங்க தெரிவித்தார்.

இதேவேளை பதவி உயர்வுக்காக துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனை வழங்கியதாக நீதவான் பத்மினி ரணவக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக சிங்கலே தேசிய அமைப்பு நீதிச்சேவைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது. நீதவான் பத்மினி ரணவக்க ரன்ஜன் ராமநாயக்கவுடன் உரையாடும் ஒலிப்பதிவு வெளியாகியுள்ளது. குறித்த ஒலிப்பதிவு இரு வெட்டையும் சிங்கலே தேசிய அமைப்பு சாட்சியாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 8, 2020 06:24

Default