தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் அமைதியான வாழ்வை பாதுகாக்கும் நோக்கில் விசேட நடவடிக்கை பிரிவு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 7, 2020 16:22

தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் அமைதியான வாழ்வை பாதுகாக்கும் நோக்கில் விசேட நடவடிக்கை பிரிவு

தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் அமைதியான வாழ்வை பாதுகாக்கும் நோக்கில் விசேட நடவடிக்கை பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படை தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள இப்பிரிவு 24 மணிநேரமும் செயற்படுமென விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீப் தெரிவித்தார்.

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்கள், கப்பம் பெறுவோர், சட்டவிரோத ஆயுதங்களை பயன்படுத்துவோர், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான வர்த்தகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பொதுமக்கள் இந்த பிரிவுக்கு தகவல்களை வழங்கக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 0112 580518 மற்றும் 0112 058552 ஆகிய இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும்.

மேலும் 0112 588499 என்ற பெக்ஸ் இலக்கத்திற்கு தகவல்களை வழங்க முடியும். தகவல் வழங்குவோரின் இரகசியம் பாதுகாக்கப்படுமெனவும் பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. குறித்த நடவடிக்கை பிரிவுக்கு கிடைக்கும் சரியான தகவல்கள் நாடு முழுவதுமுள்ள விசேட அதிரடிப்படை முகாம்களுக்கு விரைவாக அனுப்பப்பட்டு துரித விசாரணை இடம்பெறுமென விசேட அதிரடிப்படை மேலும் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 7, 2020 16:22

Default